நீயும் நானும்...

என் மனமெங்கும் மழைக்காலம்
உன் அன்பெனும் ஒளிக்கோலம்

என் தளர்ந்த பொழுதுகள்
உன் தளிர்க்கரம் பற்றித் தொடரும்

நடைசோர்ந்த போதும்
உன் தோள் சாய்ந்து வளரும் என் பயணம்

விரட்டும் வேதனைகளில் வீழ்ந்திடாது
உன் இடையணைத்து நீளும் என் பாதைகள்

இருள் என்னை இறுக்கும்போதும்
இரக்கமில்லா மனிதர்கள் வருத்தும்போதும்
பாதகமில்லை பயமுமில்லை
உன் பார்வை ஒன்றே என் வழிகாட்டியாய்

அம்மா
இயற்கை என்பது உன் பெயர்
என் வாழ்க்கை என்றும் உன் கையில்

சோகம் எனை சூழ்ந்த போதும்
சுயமிழந்து நான் வீழ்ந்த போதும்
உன் மடிசாய்ந்து மகிழ்ந்திருப்பேன்
மரணத்தையும் மறந்திருப்பேன்...


Blogger Template by Blogcrowds