திங்கள், 12 அக்டோபர், 2009

நானும் கவிதை சொல்வேன்...


அன்பே ,

நானும் கவிதை சொல்வேன்
உன்போல் ஆற்றல் நிறைந்ததல்ல‌
என்போல் ஆசை முகிழ்ந்ததாய்...
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் அறிவு நிறைந்தத‌ல்ல‌
என்போல் அன்பு மலர்ந்ததாய்...

நானும் க‌விதை சொல்வேன்
உன்போல் மேன்மை நிறைந்ததல்ல
என்போல் மென்மை செரிந்த‌தாய்...
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் பெருமை நிறைந்த‌த‌ல்ல‌
என்போல் பெண்மை சொரிந்த‌தாய்...

இன்னும் கூட‌ நிறைய‌ சொல்வேன்
என் எண்ண‌ம் யாவும் எழுதிச்செல்வேன்
உதிரும் உள்ள‌க் க‌ன‌வைச் சொல்வேன்
உன் உயிரில் உறைந்து உள்ள‌ம் நிறைவேன்...

13 கருத்துகள்:

மனோவியம் சொன்னது…

//இன்னும் கூட‌ நிறைய‌ சொல்வேன்
என் எண்ண‌ம் யாவும் எழுதிசெல்வேன்
உதிரும் உள்ள‌க் க‌ன‌வைச் சொல்வேன்
உன் உயிரில் உறைந்து உள்ள‌ம் நிறைவேன்//

மன நிறைவை சொல்லுங்கள்
மன மகிழ்வாய் வாழுங்கள்
எண்ணிய எண்ணங்கள்
ஏற்றிவிடும் உங்கள் வாழ்வை
கனவுகள் நினைவாகட்டும்
கனவுகள் உதிர்வதிலை
கருவாய் உயிக்கொள்ளும்
அவர் உயிராய் நிலைக்கொள்ளட்டும்!

ஆகா! ஆகா! இது சங்க காதலா இல்லை உங்கள் சொந்த காதலா?

கிருஷ்ணா சொன்னது…

யாரந்த 'உன்' தோழி?? ஆவல் ஆவல்... தெரிந்துகொள்ளத்தான்.. !

sivanes சொன்னது…

வணக்கம் நண்பரே, சில பொழுதுகள் இப்படி கிறுக்கல்கள் படைப்பது வழக்கம், தங்களின் மனங்கனிந்த நல்லாசிகளுக்கு மிக்க நன்றி...! :‍)

sivanes சொன்னது…

கிருஷ்ணா

வணக்கம் நண்பரே, தங்கள் வரவு நல்வரவாகுக, ராணுவ ரகசியமெல்லாம் வெளியிலே சொல்லக்கூடாதே நண்பா...! :‍)

கிருஷ்ணா சொன்னது…

அந்த 'உன்' யாராக இருந்தாலும் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.. தமிழோடு உறவாடுவதே இன்பம் அல்லவா?! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது உளங்கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துக்கள்..!

RAMYA சொன்னது…

கவிதை நல்லா இருக்கு!

அப்படியே அந்த தோழி பெயரையும் சொல்லிடுங்க
எவ்வளவு பேரு கேட்டு இருக்காங்க :-)

மதியழகன் சொன்னது…

நண்பருக்கு வணக்கம் ... நன்று உங்கள் கவிதை .. மேலும் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். நான் நிறைய சுஜாதா கதைகள் படித்திருக்கிறேன் அனால் எனக்கு பிடித்தது அந்த விஞ்ஞான சிறுகதைகள் தான் .. அவருடைய நாடகமும் மற்ற கதைகளும் என்னை அவ்வள்வாக ஈர்க்கவில்லை(சிரிரங்கத்து தேவதைகள் உட்பட). எனக்கு மிகவும் பிடித்த நேசிக்கும் கதையாளர் அமரர் கல்கி அவர்கள் ..அவரின் சிவகாமியின் செல்வன் பார்த்திபன் கனவு இரண்டும் என் மரணத்திற்கு பின்பு என் சாம்பலிலும் நினைவிருக்கும். சந்திப்போம் மதியழகன் ....

Tamilvanan சொன்னது…

//நானும் கவிதை சொல்வேன்//
க‌டைசி வ‌ரைக்கும் க‌விதையை... சொல்ல‌வே இல்லை?

sivanes சொன்னது…

கிருஷ்ணா...

மிக மிக நன்றி நண்பரே, வேளைப்பளுவால் உடனே பதில் அளிக்க இயலாமல் போய்விட்டது, தங்களுக்கும் இந்த நாளும் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நாளும் இனிய நாளாய் வாய்த்திட மனங்கனிந்து வாழ்த்துகிறேன் நண்பரே...!

sivanes சொன்னது…

RAMYA...

ரொம்ப்ப்ப்ப நன்றி ரம்யா...!

அந்த தோழியின் பெய‌ர்தானேப்பா, அதற்கென்ன சொல்லிட்டாப் போச்சு, அந்த தோழியின் பெயர் சிவனேசு, போதுமாப்பா...?

sivanes சொன்னது…

மதியழகன்...

வணக்கம் நண்பரே..., நன்றி, சுஜாதா சொல்லாட்சி திற‌ன் மிகவும் பிடிக்கும், அதில் எளிமையும் நளினமும் மலிந்திருப்பதால், கல்கி ஒரு பிரமாண்டம், அவரை வர்ணிக்க வார்த்தைகள் தேடிக்கொன்டிருக்கிறேன்...! :)

sivanes சொன்னது…

Tamilvanan...!

அடக் க‌ட‌வுளே! க‌விதை சொல்வேன்னு க‌விதைத்த‌ன‌மா சொன்னேனே :(
"கோலாலும்பூர் குசும்பா" தல ? :)

மனோவியம் சொன்னது…

//நிமிடம் தோறும்
நினைந்து வியக்கிறேன்,
உன்
நினைவுச் சாரலில்
நனைந்து சிலிர்க்கிறேன்...! // அற்புத வரிகள்,பாராட்ட வார்த்தைகள்
இல்லை.....வாழ்த்துக்கள் அம்மா.வாழ்க வளமுடன்