என்னை வளர்த்த அன்பு மனம் எனக்கென
உழைத்துக் களைத்தது(உ)ம் கரம்
எண்ணத்தில் என்றும் மலரும் தியாகம் - நான்
தந்தை எனும் சிற்பி செதுக்கிய சிற்பம்
ஆத்திரம் தேக்கி அனல்முகம் காட்டினும்
ஆசை பேச்சுகள் அறவே நீக்கினும்
மனதுள் மலையாய் குவிந்தது(உ)ம் அன்பு - அதை
மறைத்தே வளர்த்தது உந்தன் மாண்பு
அகவை ஐம்பது ஆன போதிலும்
அப்பாவின் பெண்ணுக்கு வயது ஐந்துதான்
ஆயிரம் உறவுகள் அணிவகுத்து நின்றாலும் - வாழ்வின்
அரிய வரவு அப்பாவின் உறவுதான்
இன்னொரு பிறவி நானும் பிறக்கனும்
எனக்கு மகனாய் நீங்கள் வாய்க்கனும்
பாசத்தைப் பொழிந்து உங்களை வளர்க்கனும் - அந்த
பிறவிப்பயனை இனிதாய் துய்க்கணும்
நூறு வயது நீங்கள் வாழனும்
நோய் நொடியின்றி வாழ்வை ரசிக்கனும்
சிறியவள் நானும் வாழ்த்துகிறேன் - உங்கள்
சிறப்பினை உணர்ந்து போற்றுகிறேன்...
நன்றி அப்பா....
சிவ.ஈஸ்வரி @ சிவனேசு
பினாங்கு
5/3/2016