சனி, 23 டிசம்பர், 2017

ஒரு குருவிக்கூட்டின் கதை...!!


குலதெய்வ கோவிலானது எங்கள்
குடும்ப வீடு 
அது அன்பினில் நெய்த 
குருவிக்கூடு...!!

ஐந்து பிள்ளைகளை
அழகாய் வளர்த்த தேவதை
இன்றும் ஒவ்வொரு பிள்ளையின்
இல்லம் நாடி
பரிபாலிக்கிறது
பேரப்பிள்ளைகளை...

குலதெய்வ கோவிலானது
குடும்ப வீடு...

தந்தை மட்டும் 
தன்மையாய் வீட்டை 
காக்கும்
காவல் தெய்வமாய்
தனியே...

குலதெய்வ கோவிலானது
குடும்ப வீடு...

வேடந்தாங்கல் பறவைகளாய்
வேறு வேறு ஊர்களில் பிள்ளைகள்

ஒவ்வொரு விக்ஷேசமும் 
ஒன்று கூடும் ஒரு தளமாய்

கூடிக்குலவி கும்மியடித்து
சந்தோக்ஷம் பேசி
சண்டையும் இட்டு

எல்லாம் தீர்ந்ததும்
அவரவர் பாதையில்
அவரவர் வாழ்வி நாடி

என்ன செய்வது
இதுதானே வாழ்வென்பது...

வீடு ஓய்ந்திருக்கிறது
வரப்போகும் விக்ஷேசத்திற்கு
வாசல் திறந்து காத்திருக்கிறது

வரப்போகும் புத்தாண்டை 
வரவு வைத்துக்கொண்டு
வழிமேல் விழி வைத்து
வசந்தங்களை தன்னில் வைத்து

எனை தூக்கி வளர்த்த
எங்கள் குடும்ப வீடே நன்றிகள் உனக்கு...

வணங்குகிறேன் உன்னை
வாழ்த்துக்களுடன்...

குல தெய்வ கோவிலானது
குடும்ப வீடு........