அன்பே,
உன் விழி சிந்தும் ஒளிச்சாரலில்,
என் வழி தோறும்
வானவில் தோரணங்கள்...,
உன் பாதச்சுவடு பட்டு,
இந்தப் பாறையிலும்
இன்று ஈரம் துளிர்த்ததே...!?
இருண்ட பிரதேசமாய்
இதயம்,
உன் வரவால் மின்னலுக்கு
இடம்பெயர்ந்ததே...!
வரண்ட நதியாய்
வாழ்க்கை,
உன் அன்பெனும்
ஊற்றில் இன்று
சங்கமமானதே...!
வருத்தம் தோய்ந்த
வாழ்க்கை
உன் உறவின் வரவால்
வசந்தகாலத்தின்
வடிவம் பூண்டதே...!
கவி பேசுதே உன் மெளனம் ,
உயிரை விலை பேசுதே
உன் உருவம்...!
நிமிடம் தோறும்
நினைந்து வியக்கிறேன்,
உன்
நினைவுச் சாரலில்
நனைந்து சிலிர்க்கிறேன்...!
மறந்தும் மரிக்காது நினைவு...!
அன்பே
மரித்தும் மறக்காது நினைவு...!
உனக்காக உன்னோடு
உன் நினைவுகள் மட்டும்
உயிர் கலந்து என்னோடு...!