ஆன்மாவில்
அலைபாயும்
அரிதாரம் துறந்த
ஆழ்மனதின்
அலரல்கள் !
இதயத்தில்
இடங்கொன்ட
இனங்கானா
இருள்வெளிகள் !
உருவம்
உதிர்த்த
உணர்வுகள்
உறங்காத
உயிர்வலிகள் !
நிதர்சனத்தின்
தரிசனத்தில்
நிம்மதி தொலைத்த
நிஜங்கள் !
கண்ணீர் வேண்டாம் !
கருணை வேண்டாம் !
புவிவிட்டு
புறப்பட
புன்னகையோடு ஒரு
பிரியாவிடை... !