புதன், 3 ஜூன், 2009

இளைஞனே!

என் குல மறவனே!

நீ வீரத்தின் பிறப்பிடம்!
வெற்றியின் விளைநிலம்!
எந்தன் இனத்தின் கண் நீயே‍!
இச்சமுதாயத்தின் தூண் நீயே!

கட்டபொம்மன் வீரவாள்
நீ கொல்லும் அரிவாள் ஆனதும் ஏன்?
வாழப்பிறந்த என் இனமே
நீ ‍வீழ்வது விதியல்ல, உன் வினையே!

ஊட்டாமலேயே உயர்ந்தவர்கள்,
ஊருக்குள்ளே பலருண்டு,
ஊக்கத்தோடு செயல்பட்டால்,
உன்னை மிஞ்சிட ஆளேது?

கடமையுணர்வைக்கொன்டு நட!
கண்ணியம் கொன்டு சிறந்து நட!
க‌ல்வியைத்துணையாய் ஏற்றுக்கொள்!
கற்றவனாய் உனை மாற்றிக்கொள்!

எந்தத்தொழில் நீ புரிந்தாலும்,
அதிலே உயர்ந்திடும் வழிதேடு,
காலம் உனக்கு வழிகாட்டும்,
கவலை மறந்து நலம் சேரும்!

சமுதாயத்தை மறக்காதே
உன் பங்கை ஆற்றிட தவறாதே!
அனைவரும் இங்கே ஒன்றே,
நாடிடுமே நலம் நன்றே...


பி.கு: எங்கள் குல சிங்கங்களுக்கு இந்தக்கவிதை ஓர் விண்ணப்பம்!
அன்புடன்,
சிவனேசு





6 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

இப்படியெல்லாம் நம் இன சகோதரகள் இருக்கவேண்டும்... இருப்பார்களா??

sivanes சொன்னது…

நன்றி கிருக்ஷ்ணா, நம்மின ஆண்களில் பலர் சிறப்பாய் இருக்கிறார்கள்!, இன்னும் இருப்பவர்களும் மாறினால் அதுவே நம் சமுதாயத்தின் வெற்றியாகும்!

கிருஷ்ணா சொன்னது…

உண்மைதான் தோழி.. என் மனதில் வருடல் எல்லாம்.. மேன்மையுற்றிருக்கும் பலரைவிட.. சமுதாயத்தை தலைகுனியச் செய்யும் ஒரு சில இளைஞர்களை நெறிப்படுத்த நல்ல அரசியல் கட்சி இல்லை என்பது மட்டுமே! அரசியல், ஒரு இனத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.. அதற்கு முதலில், நல்ல கட்சியை நாம் நிர்மாணிக்க வேண்டும்.. ஹ்ம்ம்ம்... என்று தனியும் இந்த சுதந்திர தாகம்!

sivanes சொன்னது…

கூடிய விரைவில் "உதய"த்தை எதிர்ப்பார்க்கிறோம்! நாம் நினைப்பது நடந்தால் நல்லது நண்பரே!!!

கிருஷ்ணா சொன்னது…

உங்களின் தமிழன் கவிதை மிக நன்று.. ஆனால், அங்கே கருத்துரையிட வழியில்லாமல் இங்கே எழுதுகிறேன்.. தொடர்ந்து எழுதுங்கள்..

sivanes சொன்னது…

நன்றி கிருக்ஷ்ணா