அன்பே ,
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் ஆற்றல் நிறைந்ததல்ல
என்போல் ஆசை முகிழ்ந்ததாய்...
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் அறிவு நிறைந்ததல்ல
என்போல் அன்பு மலர்ந்ததாய்...
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் மேன்மை நிறைந்ததல்ல
என்போல் மென்மை செரிந்ததாய்...
நானும் கவிதை சொல்வேன்
உன்போல் பெருமை நிறைந்ததல்ல
என்போல் பெண்மை சொரிந்ததாய்...
இன்னும் கூட நிறைய சொல்வேன்
என் எண்ணம் யாவும் எழுதிச்செல்வேன்
உதிரும் உள்ளக் கனவைச் சொல்வேன்
உன் உயிரில் உறைந்து உள்ளம் நிறைவேன்...