வியாழன், 4 அக்டோபர், 2012

மீண்டும் ஒருமுறை ...!





பிரியம் நிறைந்த உறவே உம்
பிரிவில் கரையுது உயிரே
பிறந்து மீண்டும் வந்திரு என்
பேர்த்தி ஆக வாழ்ந்திரு

அள்ளி அணைத்து மகிழுவேன்,
அருகில் வைத்து நெகிழுவேன்,
அறிவுக் கதைகள் பகருவேன்,
அன்பை நாளும் பகிருவேன்

தளிர் கரத்தை பற்றுவேன் உடன்
தளர் நடையும் பயிலுவேன்
நிலவுக் கதைகள் வாசிப்பேன் உன்
நினைவை நாளும் சுவாசிப்பேன் 
 
கண் இமையாய் காத்திருப்பேன் என்
கருமணி என  பார்த்திருப்பேன்
மரணம் வாய்த்‌த கண‌த்திலே  உன்
மடியில் சாய்ந்து கண்வளர்வேன்

வானில் மீனாய் மின்னிடுவேன் உன்
வாழ்வு செழிக்க எண்ணிடுவேன் நாம்
மண்ணில் வாழ்ந்த வாழ்க்கையை
மனதில் வைத்து போற்றுவேன்...!

மாண்டுபோன என்னுயிரே
மீண்டுவா நீ வேண்டும் மீண்டும்...! 

அன்புடன்
மறைந்த பாட்டியை மறவாத பேர்த்தி :(