sad girl pictures
இரணமான
இதயத்தை
இரட்சிக்கும்
கடந்தகாலம் மேவி
எதிர்காலம் தேடி
நிகழ்காலம் தொலைக்கும்
நீங்கா ஸ்வரங்கள்...!
கானல் வீதிகளில்
கனவுகள் சுமந்து
இறங்கும் எக்ஸலேட்டரில்
ஏறும் மனம்,
தேற்றுகிறேன்;
மீண்டும் மீண்டும்
தோற்றும்...!
முயற்சியை
முறித்துவிடும்
வழுக்குப்பாறையாய்
வாழ்க்கை...!
இருந்தும்
மூன்று கால்
முயலாய்
என் பிடிவாதமும்
நானும் ...!
கூடவே
உன் நட்பெனும்
பிம்பமும்...!
என் வாசல் முழுதும்
வண்ணப் பூக்கள்
அன்பு, நட்பு, உறவென்ற
பெயரில்
ஆயிரம் மலரில்
அதிசய மலராய் நீ...!
என்
வானம் முழுதும்
வர்ண ஜாலம்
கற்பனை சிறகுடன்
கால ஓடம்...
என் மனவானில்
நிலவாய் நீ
உன் நினைவாய் நான்...!
மீண்டும் மீண்டும்
தொலைந்து
மீளும் கனவாய்
நாமும் நமது வாழ்வும்...!