பயம்
ஆன்மாவில்
அலைபாயும்
அரிதாரம் துறந்த
ஆழ்மனதின்
அலரல்கள் !
இதயத்தில்
இடங்கொன்ட
இனங்கானா
இருள்வெளிகள் !
உருவம்
உதிர்த்த
உணர்வுகள்
உறங்காத
உயிர்வலிகள் !
நிதர்சனத்தின்
தரிசனத்தில்
நிம்மதி தொலைத்த
நிஜங்கள் !
கண்ணீர் வேண்டாம் !
கருணை வேண்டாம் !
புவிவிட்டு
புறப்பட
புன்னகையோடு ஒரு
பிரியாவிடை... !
8 கருத்துகள்:
//உருவம்
உதிர்த்த
உணர்வுகள்
உறங்காத
உயிர்வலிகள் //
அன்பின் சிவனேசு அவர்களுக்கு....தத்துவ முத்துக்களை அள்ளி தெரிக்கும் உங்கள் கவிதை வரிகள்..
சித்தனின் சிந்தனையும்
புத்தனின் போதனையும்
படரவிடும் உங்கள் கவிதை....
அப்பாப்பா.....என்ன கவிதை நயம்
ஆற்றால் மிக்க கவி
ஆர்த்திடும் உங்கள் வரி.....
வாழ்க வளமுடன்
அன்புடன் மனோகரன்
manokarhan krishnan
நன்றி நண்பரே, மனங்கனிந்த வாழ்த்துக்களை வார்த்தைகளில் அறிய முடிகிறது! நானும் தங்களின் சிறந்த படைப்புகளை பின்தொடர்ந்து வருகிறேன்! சிறப்பான விக்ஷயங்களை முன்வைக்கிறீர்கள், மிகவும் நன்று! தொடர்ந்து வருக ! தங்கள் கருத்தினை தருக!
நல்லா இருக்கு.. இதனை ஈழத்தமிழர்களுக்கும் அர்பணிக்கலாம்!!!
ஆமா நீங்க தத்துவ ஞானியா? கவிஞரா???
உங்க கவிதையும் அதற்கான படமும் அருமை!!
மகிழ்ச்சியோடு புறப்படு
கையசைத்து அனுப்புவேன்
குறை ஒன்றும் இல்லை !!!
நண்பரே! ஈழ சகோதர சகோதரிகளுக்கு இதை நிச்சயம் அர்ப்பணிக்க மாட்டேன்! ஏனென்றால் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழவேண்டும்! விடைபெற்று போகக்கூடாது என்பதே எனது பிரார்த்தனை!
//ஆமா நீங்க தத்துவ ஞானியா? கவிஞரா???//
அப்பப்போ இப்படி ஏதாச்சும் உளறிவைப்பேன் அதுக்குப்போயி.....(ஹிஹிஹி)
Tamilvanan
கவிதை பிடிக்கலேன்னா, பிடிக்கலேன்னு சொல்லனும்! இப்படியா விரட்டுவாங்க ? இப்ப நான் கோவமா கெளம்பரேன், கூடிய விரைவில் இன்னொரு கவிதயோடு வருவேன், தயாரா இருங்க !!!
//இன்னும் கூட நிறைய சொல்வேன்
என் எண்ணம் யாவும் எழுதிசெல்வேன்
உதிரும் உள்ளக் கனவைச் சொல்வேன்
உன் உயிரில் உறைந்து உள்ளம் நிறைவேன்//
மன நிறைவை சொல்லுங்கள்
மன மகிழ்வாய் வாழுங்கள்
எண்ணிய எண்ணங்கள்
ஏற்றிவிடும் உங்கள் வாழ்வை
கனவுகள் நினைவாகட்டும்
கனவுகள் உதிர்வதிலை
கருவாய் உயிக்கொள்ளும்
அவர் உயிராய் நிலைக்கொள்ளட்டும்!
ஆகா! ஆகா! இது சங்க காதலா இல்லை உங்கள் சொந்த காதலா?
கருத்துரையிடுக