புத்தாண்டு புலர்ந்தது
புதிய இன்பம் மலர்ந்தது
இயற்கையின் விழியாக
இரவு பகல் வழியாக
நாட்கள் நகர்ந்தன
வாரங்கள் நடந்தன
மாதங்கள் மணந்தன
வருடமும் வளர்ந்தது
இதோ,
2009 புவிவிட்டு புறப்பட
2010 புதுவரவை நல்கிட
வாழ்த்துச் சொல்வோம்
வரவேற்பைச் சொல்வோம்
இனி
அன்பை விதைத்து மகிழ்ந்திடுவோம்
ஆற்றல் கொன்டு சிறந்திடுவோம்
இனிமைத் தமிழை போற்றிடுவோம்
ஈகைப் பண்பில் உயர்ந்திடுவோம்
உண்மை, நேர்மை நம்சொத்து
ஊக்கம் என்பது உயிர்ச்சத்து
எண்ணம் என்றும் உயர்வாக
ஏற்றம் இனத்தின் கண்ணாக
ஐக்கியம் இனத்தின் ஒளியாக
ஒற்றுமையுடனே ஒருங்கினைவோம்
ஓங்கி உயர்ந்து உலகளப்போம்
அகமும் முகமும் மலர்ந்திருப்போம்
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே"
புதிய இன்பம் மலர்ந்தது
இயற்கையின் விழியாக
இரவு பகல் வழியாக
நாட்கள் நகர்ந்தன
வாரங்கள் நடந்தன
மாதங்கள் மணந்தன
வருடமும் வளர்ந்தது
இதோ,
2009 புவிவிட்டு புறப்பட
2010 புதுவரவை நல்கிட
வாழ்த்துச் சொல்வோம்
வரவேற்பைச் சொல்வோம்
இனி
அன்பை விதைத்து மகிழ்ந்திடுவோம்
ஆற்றல் கொன்டு சிறந்திடுவோம்
இனிமைத் தமிழை போற்றிடுவோம்
ஈகைப் பண்பில் உயர்ந்திடுவோம்
உண்மை, நேர்மை நம்சொத்து
ஊக்கம் என்பது உயிர்ச்சத்து
எண்ணம் என்றும் உயர்வாக
ஏற்றம் இனத்தின் கண்ணாக
ஐக்கியம் இனத்தின் ஒளியாக
ஒற்றுமையுடனே ஒருங்கினைவோம்
ஓங்கி உயர்ந்து உலகளப்போம்
அகமும் முகமும் மலர்ந்திருப்போம்
"இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பர்களே"
4 கருத்துகள்:
வணக்கம் டீச்சர்...புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .இனிய கவிதை உங்கள் இதயத்தை போல்.வாழ்க வளமுடன்
தங்களுக்கும் இனிய 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள் !
2010 ஐ வரவேற்கும் கவிதை அருமை!
மனோகரன் கிருட்ணன்,
நன்றி பாஸ்...! தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...! :)
புத்தாண்டு வாழ்த்துக்கள்,2010 வரவேற்கும் கவிதை இனிமை.
கருத்துரையிடுக