கரையை தேடி
ஒடுங்குது அலைகள்
கனவுகளைத் தேடித் தேடி
அடங்காதது வாழ்க்கை
யார் உறவு ?
யார் பகை ?
உருவம் தெரியாத
உணர்வுகள்
உண்மையை
உரைக்கும்
நிகழ்வுகள்
பாடி வரும் தென்றலும் உனை
தேடி வரும் வான்முகிலும்
ஆசி தூவி வாழ்த்திடும் உன்
அன்பை கண்டு போற்றிடும்
வளமை வாழ்வில் ஓடிவரும்
வசந்தமும் உன்னை நாடிவரும் உன்
வாசல் தேடி வாழ்த்துப்பாடும் நீ
உன்னை உணர்ந்து வாழ்வில் உயர்ந்தால்
உலகும் உன்னை வியந்திடும்
அன்பு என்றும் அழகுதான்
இடம், பொருள், ஏவல் ,
இணைந்து ஏற்கும் பொழுது
நட்பு கூட போலிதான்
உள்ளங்களை மறந்து
உருவங்களே ஆட்சி கொள்ளும் பொழுது.....!