பளபளவென வர்ணம்
படைத்த பட்டாம்பூச்சியே, அழகில்
படபடக்கும் இரக்கை காட்டும்
கண்ணாமூச்சியே
எட்டிப்பிடித்து தொட்டுப்பார்க்க
ஏங்குது உள்ளம்,
இருந்தும் வேண்டாம் என்று
இழுத்துப்பிடித்து தடுக்குது எண்ணம்
வானவில்லின் வர்ணம் காட்டும்
பருவ ராணியே, உலகின்
வனப்பையெல்லாம் தன்னில் காட்டும்
பகல் வின்மீனே
அழகு இரக்கை படபடக்க
தேடி வருகிறாய் நீ
அங்கு மலர்ந்த மலரில் அமர்ந்து,
தேனை அருந்துவாய்
முழுமையடையும் முன்னே நீ ஏன்
மனிதன் கண்பட்டாய் ?
பாவி கம்பளிப்புழு உனை அழித்தே
பட்டு நெய்து விட்டான்!
கம்பளிப்புழு என்றால் சிதறி
கன்னியர் ஓடுவார் - இருந்தும்
கண்கவரும் பட்டாய் மாற
களித்து உடுத்துவார்!
என்ன ஞாயம்?
என்ன நேயம்?
மனித மனதுக்கு,
மற்ற உயிரை மாய்த்து
மினுக்கும் பட்டும் எதற்கு?
2 கருத்துகள்:
ம்ம்ம் உண்மைத்தான்...ஆனால் நாம் வாங்கி ஆதரவு கொடுக்காவிட்டால் எப்படி???
இனிய புனிதா, தங்கள் வரவு நல்வரவாகுக!
நாம் செயற்கை பட்டுக்கு மாறிவிடுவோம்!!!!!
அதை அவர்களை தயாரிக்கச்செய்து ஆதரவு தருவோம்!
கருத்துரையிடுக