ஒளிவீசும் சுடர் சூடி,
உலா வரும் நிலவு மங்கை,
நீல வண்ண மேடையிலே,
நர்த்தனமாய் ஆகாய கங்கை,
மேகங்களை துணைக்கழைத்து,
மோகங்களில் முகம் நனைத்து,
நீல வண்ண ஆடையிலே,
கோடி மீன்கள் சூழ நின்றாள்,
நேசம் கொன்ட தன் துணையை,
நேரில் காண ஏங்குகிறாள்,
துயில் மறந்து தேடுகிறாள் - அவள்
துக்கத்திலே வாடுகிறாள்,
கலங்காதே நிலாப்பெண்ணே - உன்
கணவன் வருவான் கண் முன்னே,
அன்போடு மெய் சேர்வான் - அவன்
ஆசையோடு உனை அணைப்பான்,
வானதேவன் கைகோர்த்து,
வசந்தம் வீசும் வெண்ணிலவே,
வீதி வரும் உன் எழிலை,
வாசல் நின்று காணுகிறேன் - போற்ற
வார்த்தையின்றி நாணுகிறேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக