பெண்ணே
புதுமைப்பெண்ணாய் பொங்கியெழு!
புதுயுகம் படைக்க விரைந்துவிடு!
புதுயுகம் படைக்க விரைந்துவிடு!
தோல்வியைக்கண்டு துவண்டுவிடாதே - அது
வெற்றிக்கு முதல்படி மறந்துவிடாதே!
சோதனை கண்டு சோர்ந்துவிடாதே - அதை
சாதனையாக்கிட தயங்கிவிடாதே!
அன்பில் சிறந்த கண்மணியே!
அறிவில் உயர்ந்த பொன்மணியே!
அழகில் நீயே முழுமதியே!
ஆளப்பிறந்த வெகுமதியே!
மகளாய் மண்ணில் நீ பிறந்தாய்!
பெண்ணாய் பூமியில் வாழவந்தாய்!
துணையாய் ஆணுடன் சேர்ந்து நின்றாய்!
நீ தாயாய் தெய்வத்தை மிஞ்சிவிட்டாய்!
உன் புகழ் பாடிட வரியேது ?
புவியில் நீயின்றி புகழேது ?
வாழ்த்துகிறேன் உனை நான் இன்று!
வாழ்வில் வெற்றிகள் பல கண்டு
வாழிய நீயும் பல்லாண்டு!
பி.கு : இக்கவிதையை வாசிக்கும் அனைத்து பெ(க)ண்மணிகளுக்கும்
அன்புடன்
சிவனேசு
5 கருத்துகள்:
சந்தக் கவிதை அழகாக இருக்கிறது... கட்டுரைகளையும் எழுதுங்கள்... :))
நன்றி விக்னேக்ஷ்வரன், கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை அல்லவா..? நம் இன சோதரிகள் சுடர் விளக்குதான்.. அவர்களுக்கு உங்கள் கவிதை தூண்டுகோள் ஆகட்டும்..!
நன்றி கிருக்ஷ்ணா! அந்த சுடர் விளக்குகள் நமது சமுதாயத்திற்கு மேலும் ஒளிசேர்க்கட்டும்!
Ungalin anaitu kavitaigalum padikka padikka suvayaga ullana melum itu pondra kavitagalai engaluku viruntaga padaiga.nandri
கருத்துரையிடுக