சிந்துகிறாள்
கண்ணீர்!
உறக்கமற்ற
கனவுகளின்
இரக்கமற்ற
நினைவுகளில்
நிதர்சனத்தை
நாடுகிறாள்
இழந்துபோன
இளமையை
அவள்
எங்கு சென்று
தேடுவாள்?
விடியல் தரும்
சூரியன்
வாழ்வில்
வெளிச்சம்
தரவில்லையே
வானில்
வளரும்
நிலவும்
இவள்
வருத்தம்
போக்கவில்லையே
தேடி வரும்
தென்றலும்
துணையை
காட்டவில்லையே
இராமன்
வாசல்
வரவில்லை
இராவணனும்
வாழ்வில்
இல்லை
தனிமையே
துணையாக
வெறுமையே
வாழ்வாக
மனிதம்
தொலைத்த
மனிதர்களின்
மெளனங்களே
பரிசாக அவள்
வாழ்வில் ஏது
வசந்தங்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக