காலமே,
கண்களில் விளைந்த என்
கவிதை வரிகளை,
காற்றென வந்து ஏன்
களவாடிக்கொன்டாய்.?
இயற்கையே, என்
எண்ணத்தில் இடங்கொன்ட
ஈர நினைவுகளை எனக்கே
தெரியாமல் ஏன்
பறித்துச்சென்றாய். ?
கனவுகளே,
சோகத்தை
சொந்தமாக்கி
சொர்க்கத்தை
தூரமாக்கி
சொல்லாமல்
செ(கொ)ல்வதுதான்
உன் நியாயமா?
தேடிவரும் தென்றலும்,
பாடிவரும் பறவைகளும், உனை
நாடிவந்து உறவாட,
வசந்தம் வீசும்
நீயும் அங்கே,
வாடி நிற்கும்
நானும் இங்கே!