சனி, 4 ஜூலை, 2009

கம்போங் புவா பாலா...!


ஆப்பசைத்த குரங்குகளாய்
அரசியல்வாதிகள்!

அன்று
ஓட்டு கேட்டு
ஓடி வந்தனர்!

இனிக்கப் இனிக்கப்பேசி
இதயத்தைக் கவர்ந்தனர்!

வாக்குறுதிக‌ளை
வாரியிரைத்து
வான‌ளாவ‌ அள‌ந்த‌ன‌ர்!

ஆரவாரமாய் ந‌ம்
முதுகில் ஏறி,
ஆட்சியும்
பிடித்துக் கொன்ட‌ன‌ர்!

இன்று,

த‌ன‌க்கொன்றும்
தெரியாதாம்,
அப்பாவி
(முத‌ல்)அமைச்ச‌ர்
அள்ளிவிடும்
அதிச‌ய‌ம் பார்!

கவலை வேண்டாம்!
காலம் இதனை
கவனத்தில்
கொள்ளும்!

எதிர்வரும்
தேர்தல் நாங்கள்
யாரென்பதைச்
சொல்லும்!

ஒன்றுபடுவாய்
என் இனமே!
ஒற்றுமை ஒன்றே
உனது பலமே!
சாதி, மதமெனும்
வேற்றுமை வேண்டாம்!
சாதிக்க என்றும்,
ஒற்றுமை வேண்டும்!,

நாளைய
சரிததிரம் நம் பெயர்
சொல்லட்டும்,
நமது சந்ததி
பூமியை வெல்லட்டும்....!


2 கருத்துகள்:

Sathis Kumar சொன்னது…

நன்கு கூறியுள்ளீர்கள் சிவனேசு. புவா பாலாவை மீட்டெடுக்கும் முயற்சியில் பங்கு பெற தங்களை அன்புடன் அழைக்கிறேன்..

sivanes சொன்னது…

நன்றி சதிசு, நிகழ்ச்சி நிரல்களை ஓலைச்சுவடியில் தெரிவியுங்கள்.