நதியின் வேதனைகள்,
நானல்கள் சொல்லியழ...,
கடலின் ஏக்கங்கள்,
அலையெழுந்து ஆர்ப்பரிக்க...,
முகில் மேவும் சோகம் யாவும்,
மழைத்துளியாய் மண் சேர,
எந்தன் மன வேதனையை
என்னவென்று நானும் சொல்ல...
காற்றிடத்தில்
கலங்கி நின்றேன்,
கவிதைகளை வாரி தந்தது...
மழைமுகிலிடம்
மனதை சொன்னேன்,
உளம் நிறைத்து உயிர் நனைத்தது,
இயற்கையிடம்
இரந்து நின்றேன்,
உன்னை
எந்தன் வாழ்வில்
தந்தது...