நானெழுதும் நட்பின் சாசனம்
எப்படி இருக்கிறாய்
என் தோழி ?
துயரம் தோய்ந்ததோ
உந்தன் விழி?
நெஞ்சிலே வீரமும்,
நினைவிலே ஈரமுமாய்
எப்படி வாழ்கிறாய்
என் பெண்ணே?
ஏக்கம் கொன்டதோ
உன் கண்ணே?
நான் உனக்காக
அழமாட்டேன், என்
விழி நீரும்
விடமாட்டேன்
விசனத்தோடு
விடை தருவதும்,
புலம்பலூடே
பிரிவைப் பெருவதும்
இந்த வாழ்வில்
இயலாத இன்னல்
எந்தன் இதயம்
ஒரு வழிப் பாதை
வருகைக்கு மட்டுமே
வாசல் வைத்தேன்
திரும்பிப்போக
திசையே இல்லை
இதயத்திலே
பிணைத்திருப்பேன்,
இறக்கும் வரை
நினைத்திருப்பேன்,
நட்பு எனும்
சாசனத்தில்
நம் பெயரைப்
பதித்திருப்பேன்!
7 கருத்துகள்:
//எந்தன் இதயம்
ஒரு வழிப் பாதை
வருகைக்கு மட்டுமே
வாசல் வைத்தேன்
திரும்பிப்போக
திசையே இல்லை//
இந்த வரிகள் அருமை!
தங்கள் பின்னூட்டம் கண்டதில் மகிழ்ச்சி, தொடர்ந்து வருக, தங்கள் கருத்தைத் தருக!
நல்ல வரிகள்... இரசித்தேன்....
உண்மைக் கவிதையா??
நட்பால் என் உயிரை ஊடுருவிய ஓருயிரின் சோகத்தில் விளைந்த உண்மைவரிகளே!
கவிதயை வாசித்தப் பின் ... வேடிக்கை, சுவாரஸ்யம், ஜாலி என்று எதுவுமே தெரியவில்லை ஆனால்
நல்ல நட்பின் உணர்வு தெரிகிறது.
நல்ல வேளை "கவிதையென்று நினைத்து வந்தேன் புலம்பலாக மாற்றிவிட்டாய்" விட்டாய் என அண்மையில் ஒரு சகோதரியின் கவிதைபண்ணையில் கலாய்த்தீரே! அதே பின்னூட்டம்தான் போலிருக்கிறது என நினைத்துக்கொன்டே பார்த்தேன், நல்ல வேளை உண்மை நட்பு பிழைத்தது!
தை!
விதை!!
கவிதை!!!
நல்ல கவிதை!!!!
கருத்துரையிடுக