
ஈரம் இல்லா அரக்கர்களாலே,
ஈழத்தில் கேட்குது மரண ஓலம்
இரக்கம் இல்லா துரோகிகள்
இவர் இதயம் இல்லா பாவிகள்
புத்தன் வாழ்ந்த பூமியை
எத்தன் இன்று ஆளுகிறான்
பூமியில் யமனாய் மாறியே
போரால் உயிர்களை வாட்டுகிறான்,
நாளும் ஒரு கதை பேசியே,
நீசத்தனங்கள் புரிகின்றான்
கண்ணீர் பெருகி வழியுது, நம்
கவலை எல்லை மீறுது
உலகம் கைகட்டி சிரிக்குது,
உயிர்கள் துடிப்பதைக்கண்டு ரசிக்குது,
மனித நேயம் பேசுது,
மக்கள் மடிவதைக்கண்டும் நடிக்குது,
விடிவே இவர்கட்கு இல்லையோ,
வாழ்வில் விடிவெள்ளி என்பதும் இல்லையோ,
வாடி விடாதே என் இனமே, உன்
வாட்டம் தீரும் சீக்கிரமே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக