அறிவில் சிறந்த அவ்வையே, இங்கு
அவசரமாகவே வரவேண்டும்,
அதியமான் தந்தார் நெல்லிக்கனி,
அதனால் நீண்டது நினது ஆயுள்,
எங்கள் தமிழரில் மூத்தோர்கள்,
ஐம்பதில் முடங்கி விடுகின்றார்,
நோய்கள் பலவும் உடல்கொன்டு,
என்பதில் விண்போய் சேர்கின்றார்!
எங்கள் தமிழின ஆண்மக்கள் - சிலர்
என்றும் தவறுகள் பல புரிந்து,
காலன் வாய்க்கு இரையானால்,
எப்படி எங்கள் இனம் பெருகும்?
எங்கள் பெண்டீர் மட்டுமென்ன - சிலர்
படித்து பட்டம் பெற்றுவிட்டு,
திருமண பந்தத்தை மறுத்திருந்தால்!
எப்படி எங்கள் இனம் பெருகும்?
திருமணம் கொன்ட தம்பதியர், பிள்ளை
ஒன்று, இரண்டு போதுமென்றால்
என்ன சொல்ல, ஏது சொல்ல
என் இனம் பெருக ஏது வழி?
வாட்டம் தீர வேண்டும் தமிழர்
வாழ்வு ஓங்க வேண்டும்
நீடு வாழ்ந்த அவ்வையே, எமக்கு
நெல்லிக்கனியை தந்திடுவீர்.....
வெள்ளி, 19 ஜூன், 2009
தமிழர்!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
ஹஹஹ... மண்ணிக்க வேண்டும்! நீங்களே தமிழர்களின் இனத்தை தனியாகப் பெருக்க போகின்றீர்களோ என்று பயந்து விட்டேன்! எதற்கு உங்களுக்கு நெல்லிக்கனி?!
தோழீ.. எதற்காக நம் இனம் பெருக வேண்டும் என நினைக்கின்றீர்கள்..?? எவ்வளவு பெருத்தாலும், நம் இனம் முன்னேறாது தோழீ! ஒற்றுமை என்பதுதான் நமக்கு தெரியாத ஒன்றாகி விட்டதே!
இந்தியாவில் எத்தனைக் கட்சிகள் தெரியுமா? அட.. இங்கு மட்டும் என்ன மாற்றம் கண்டோம்? மலேசியாவில் தமிழனுக்கு எத்தனைக் கட்சிகள் தெரியுமா? எப்படி உருப்படும் இந்த இனம் இனப்பெருக்கத்தால்??!
நண்பரே, நமது மக்கள் தொகை முன்பு மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காடு என்றனர், பிறகு 8 விழுக்காடு என்றனர், இப்பொழுதோ 7.7 விழுக்காடு என்கின்றனர், நாளை என்ன சொல்லப்போகிறார்களோ என்று பயமாக இருக்கிறது, இன்று மூவினத்தில் ஓரினம் எனும் பதவி பறிபோய் !நமது சந்ததியர் நிலை என்னாகும்?
நான் சுயநலமியென்றால் அவ்வையிடம் ரகசியமாய்க்கேட்டிருப்பேனே நண்பா, அவ்வை கொடுத்ததை விளைய வைத்து ஊருக்கே கொடுத்துவிடுவேன்! நம்புங்கள்!
//ஹஹஹ... மண்ணிக்க வேண்டும்! நீங்களே தமிழர்களின் இனத்தை தனியாகப் பெருக்க போகின்றீர்களோ என்று பயந்து விட்டேன்!//
அதியமான் அவ்வைக்கு அளித்த நெல்லிக்கனி ஆயுளை வளர்ப்பதற்கே பயன்படும்! இனப்பெருக்கத்திற்கு எப்படி பயன்படும்?
கருத்துரையிடுக