தேனினும் இனிய தமிழே,
தாய் மொழியாய் அமைந்த எழிலே,
முத்தமிழாய் நீ உலகளந்தாய்,
மண்ணில் மலர்ந்து மணம் கமழ்ந்தாய்
செம்மொழி என்னும் சீர் கொண்டாய்,
சேரும் நன்மைகள் பல கண்டாய்,
வான்புகழ் வள்ளுவன் தனை ஈந்து,
வாழ்வுக்கு நல்வழி நீ தந்தாய்,
பாரதியாரின் கவிதை வழி,
பெரும் புரட்சிக்கு தளமாய் நீ அமைந்தாய்,
என்னுயிர் மண்ணில் வாழும் வரை,
இன்னுயிர் தமிழே உனை மறவேன்,
நாடிடும் மேன்மைகள் பல கண்டு,
நீ வாழிய வாழிய பல்லாண்டு