மாதரசியே
எங்கோ பிறந்தாய்
எங்கோ வளர்ந்தாய்
புண்ணிய பூமியை
வந்தடைந்தாய்
புனிதர் என்னும்
புகழடைந்தாய்
எததனை அழுகை
மறைய வைத்தாய்
எத்தனை புன்னகை
மலர வைத்தாய்!
மனிதம் கொண்டு
மனதில் நின்றாய்
எத்தனை உயிர்களை
வாழவைத்தாய் அவரது
எத்தனை துயர்களை
தொலைய வைத்தாய்
நிறமும் பேதமும்
மறந்து வந்து
ஜாதியும் மதமும்
கடந்து வந்து
அன்பை உயிர்களில்
அன்பை உயிர்களில்
விதைத்தவரே, உமது
அன்பால் உலகில்
நிலைத்தவரே