கண்மூடி துயரத்தில் நீ!
கண்களில் நீர்வழிய நான்!
கூடித்திரிந்த வீதிகளும்,
வெறிச்சோடிக் கிடக்குதடி,
பாடிப்பறந்த சோலைகளும், நாம்
படித்த பள்ளிச்சாலைகளும் உன்
வரவு தேடி ஏங்குதடி,
பிரிவை எண்ணி வாடுதடி!
இறைவனுக்கு இதயமில்லையா?
இயற்கைக்கும் இரக்கமில்லையா?
வாழவேண்டிய உன்னை,
வாட்டுவதும் ஏனோ!
மணமகளாய் கனவு கண்டேனே!
மரணப்படுக்கையில் கண்டு நொந்தேனே!
நெஞ்சம் பதறுதடி,
நினைக்கவே கலங்குதடி!
என்னுயிர்த்தோழியே,
என் இதய ராணியே,
உடன்பிறந்தாள் போல,
உள்ளத்தை கவர்ந்தவளே!
எப்படியடி மறப்பேன் உன்னை?
மீண்டும் பழையபடி என்று நான்
காண்பேன் உன்னை ?
அதிசயங்கள் உண்மையென்றால்,
ஆண்டவனும் உண்மையென்றால்,
அற்புதங்கள் நிகழட்டும், இந்த
புற்றையும் நீ ஜெயித்து
புவியிலே வாழவேண்டும்,
அதுவரை,
இறைவனின் பாதமே
என் சரணாகதி,
உனக்கென ,
என்றென்றும் சமர்ப்பிப்பேன்
என் கண்ணீர்த்துளி!...
4 கருத்துகள்:
தோழீ.. இந்த கவிதை யாருக்காக பாடப்பட்டது? இதன் பின்னணி என்ன என்று சொன்னால்.. நானும் அஞ்சலி செலுத்துவேன்..!
என்னுடைய உயிர்த்தோழிகளில் ஒருத்தி புற்றுநோய் கண்டு வாடுகிறாள்!. அந்த வேதனையில் விளைந்த வரிகள். துயரில் பங்கேற்றதற்கு நன்றி நண்பா!.
தோழீ.. புற்று நோய்க்கு Alternate Medicine நல்ல பலன் கொடுக்கும். சித்த மருத்துவம் மூலம் துயர் நீக்கலாமே.. எனக்கு krishrtm@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.. எனக்கு நன்கு அறிமுகமான, நல்ல சித்த வைத்தியர் ஒருவர் இருக்கிறார்.. அவரின் தொடர்பு எண்களை தருகிறேன்.. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்..!
நன்றி நண்பரே!
கருத்துரையிடுக