எரிமலையாய்
நானிருந்தும்,
பனித்துளியாய்
என்னுள்
நீ!
புயலாக
நானிருந்தும்,
பூவாக
என்னுள்
நீ!
பாலைவனமாய்
நானிருந்தும்,
பருவ மழையாய்
என்னுள்
நீ!
எனக்குள்
நானே
மரித்திருந்தேன்,
உன்னால்
தானே
உயிர்த்தெழுந்தேன்!
மீண்டும்
ஒருமுறை
பிறந்து வந்தும்
நான்
உந்தன்
கரம் பற்ற
காத்திருப்பேன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக