திங்கள், 15 ஜூன், 2009

குழந்தை


ஆணிப்பொன் முத்து ஒன்று,
அன்னை த‌ன்னில் இட்டு வைத்த‌து,
ஐயிர‌ண்டு மாதம் சென்ற‌து,
அழ‌கான‌ சொத்தும் வந்த‌து,

குழந்தை என்னும் பெயரைக்கொன்டது,
குவியும் இன்பம் நூறு தந்தது,
பெற்றவர் எனும் பெயரைத்தந்தது
உற்றவர் வாழ்த்திட‌ வழியைத்தந்தது

புதிர்மொழி நீ பேசும்போது,
புவியும் கேட்குமே! உன்
பொக்கைவாய் சிரிக்கும்போது,
பூக்கள் மலருமே!

தத்தித்தத்தி நடக்கும் அழகில்,
அண்ணம் தோற்குமே! நீ
தாவி அணைத்துக்கொள்ளும் போது
தாய்மை பொங்குமே!

வண்ணசிட்டாய் புவியில் நீயும், வளர்ந்திட‌வேணும்,
அறிவுக்கூர்மையோடு, அகில‌ம் வென்று காட்டிட‌வேணும்
பெற்றவரை போற்றி நாளும் காத்திட வேணும் - நீ
மற்றவரும் மதிக்க மண்ணில் வாழ்ந்திட‌வேணும்!