ஞாயிறு, 14 ஜூன், 2009

மங்கை

அழ‌கு முகம் கொன்டவளே
எந்தன் கண்ணம்மா, உனை
அள்ளிக்கொள்ள‌ ஓடி வ‌ரும்
என்னை பார‌ம்மா!

சொத்து, சுக‌ம், வீடு, வாச‌ல்
சேர்ந்திட்ட‌ போதும், உன்
சொக்கும் விழிப்பார்வை ஒன்றே
சொர்க‌ம் காட்டுமே

அன்பு முக‌ம் காணும்‌போது,
அழ‌கு கூடுமே, உன்
பெரிய‌ விழி பார்வை முன்னே
பொன்னும் தோற்குமே

அச்ச‌ம், ம‌ட‌ம், நான‌ம் ப‌யிர்ப்பு,
அனைத்தும் கொன்ட‌வ‌ள்,
துன்ப‌ம் நேர்கையிலே
துணிவுகொன்டு வாழ்வை வெல்ப‌வ‌ள்!

பெண்குலமாய் பூமி வந்த‌‌‌
பேசும் சிற்பமே, உந்தன்
வருகையாலே வசந்தம் சேர்ந்து
வாழ்வு மலருமே!‌

4 கருத்துகள்:

S.P.Sivanes சொன்னது…

Wau inta kavitaiyum super ,atan mel podapatrikum kavitayum super,enaku rombe pudiciruku,al da best sis.tc

sivanes சொன்னது…

நன்றி ரஞ்சிதா, இந்தக்கவிதையை நான் உங்களுக்கே சமர்ப்பிக்கிறேன்! சிறந்த பெண்ணாக வாழ்வில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

Kavithini Raj சொன்னது…

ropa menmaiya kavithai valthugal frde

Kavithini Raj சொன்னது…

valthugal frd rompa menmaiya kavithai