புதன், 17 ஜூன், 2009

ஞாபகம்

ஞாபகம் இருக்கிறதா?
அன்பே,
ஞாபகம் இருக்கிறதா?

அன்றொரு சந்திப்பில்,
அறிமுகமானோம்
ஞாபகம் இருக்கிறதா?
இர‌ண்டாம் சந்திப்பில்,
ஏனோ பிடித்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?

தொடர்ந்த‌ சந்திப்பில்,
அன்பு ம‌ல‌ர்ந்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?
கால‌ம் க‌னிந்து,
திருமணம் ந‌ட‌ந்த‌து
ஞாப‌க‌ம் இருக்கிறதா?

புடவை‌யில் கண்டால்,
புன்ன‌‌கை புரிவாய்
ஞாபகம் இருக்கிறதா?
சுண்டு விர‌ல்ப‌ற்றி,
ந‌க‌ம் ஒடிப்பாயே
ஞாப‌க‌ம் இருக்கிற‌தா?

நீண்ட‌ முடியின்,
நுணி இழுப்பாயே
ஞாப‌க‌ம் இருக்கிற‌‌தா?
முறைத்தாலும் நீ,
முறுவ‌ல் செய்வாய்,
ஞா‌ப‌கம் இருக்கிறதா?

மழலைகள் பிறந்தனர்,
ம‌கிழ்ச்சியை விதைத்த‌ன‌ர்,
ஞாபகம் இருக்கிறதா?
இளமை களைந்து,
முதுமை முகிழ்ந்தது
ஞாபகம் இருக்கிறதா?

ஞாபகம் இருக்கிறது!
கண்ணே
ஞாபகம் இருக்கிறது!
இல்லறம் இணைந்து
இன்பத்தில் வாழ்வது
ஞாபகம் இருக்கிறது
இருகை கோர்த்து,
இதயத்தில் வாழ்வது
ஞாபகம் இருக்கிறது
இறுதிவரை நாம்
இணைந்திருப்போம்
எனும் நம்பிக்கை
இருக்கிறது!

சமர்ப்பணம் : அன்போடு (முதிர்)ந்த தம்பதிகளுக்கு

கருத்துகள் இல்லை: