ஐயிரு திங்கள் வேண்டியிருந்தார்!
அங்கமெல்லாம் தாய் வாடியிருந்தார்!
தந்தை பிள்ளையை போற்றி வளர்த்தார்!
தன்னை மறந்து காத்து வளர்த்தார்!
பள்ளிக்கூடம் அனுப்பி வைத்தார்!
பட்டதாரியாய் ஆக்கி வைத்தார்!
நாடிடும் நலன்கள் அனைத்தும் தந்தார்!
நானிலம் போற்றும் வாழ்வு தந்தார்!
அன்பில் சிறந்த பெற்றவர் போல்,
அவனியில் உண்டோ, தெரிந்தால் சொல்!
போற்றிடும் தெய்வம் பெற்றவரே!
அவர்க்கிணை இல்லை மற்றவரே!
பெற்றோரை மறந்தவன் மகனல்ல!
பூமியில் அவன்பேர் மனிதனல்ல!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக