வியாழன், 18 ஜூன், 2009

தேவதை


கவிதை வரிகளை
பார்க்கிறேன்
ஒரு சொல் கவிதை
உன் பெயர்!

நகைகளில் தேடி
பார்க்கிறேன்
புதிதாய் பூத்த‌ ஒருநகை
உன் புன்னகை!

வைரம் ஒளிர்வதை
பார்க்கிறேன்
வசந்தம் விளைந்திடும்
உன் விழி

அழ‌கிய‌ பூவை
ப‌றிக்கிறேன்
அதிலே தெரிவது
உன் முகம்!

உன் காலடித்தடங்களை
சேர்க்கிறேன்
அதிலே தெரியுது
என் வழி

என்னில் உன்னைப்
பார்க்கிறேன்
உன்னில் தெரியுது
என் உயிர்!

4 கருத்துகள்:

S.P.Sivanes சொன்னது…

The picture is amazing as wel as the poem.gdwork kip it up!

பெயரில்லா சொன்னது…

//என்னில் உன்னைப்
பார்க்கிறேன்
உன்னில் தெரியுது
என் உயிர்!//

பிடிச்சிருக்கு :-)

sivanes சொன்னது…

நன்றி ரஞ்சிதா!

sivanes சொன்னது…

நன்றி புனிதா!