வள்ளுவப் பெருந்தகை பிறந்து வந்தார்,
வாழ்க்கைப்பாடம் வரைந்து சென்றார்!
அருமை வள்ளலார் வந்திருந்து,
அன்பின் அகரம் விட்டுச் சென்றார்!
விவேகானந்தர் விரைந்து வந்தே,
விவேகத்தினை வளர்த்துச் சென்றார்!
அவ்வைப்பாட்டி அழகழகாய்,
அறத்தினை இங்கே கற்றுத்தந்தார்!
பகுத்தறிவுப் பகலவனாய்,
பாரினில் பெரியார் அவதரித்தார்!
அண்ணல் காந்தி அடிகளும்,
அகிம்சை பாடம் நடத்திச்சென்றார்!
ஞாலம் அளித்த ஞானியரும்,
ஞானம் என்பதை உரைத்துச்சென்றார்!
வீரம் விளைந்த அரசர்களும்,
வெற்றியின் பெருமையை விட்டுச்சென்றார்!
இத்தனை இருந்தும் என்ன பயன் - என்
இனம் ஏனோ திருந்தவில்லை!
மனிதம் என்பதை மறந்துவிட்டார் - இவர்
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டார்!
ஆற்றல் மிக்க பெரியோரே,
அவனியில் மறுபடி அவதரிப்பீர்!
தமிழர் தலையினில் கொட்டு வைப்பீர் - அவர்
4 கருத்துகள்:
அருமையான கவிதை.. பாராட்டுக்கள்..! தமிழின் மாட்சியை.. தமிழனின் சரித்திரத்தை உணராமலே இன்னும் தமிழன் தலைகுனிந்து கிடக்கிறான்.. அந்த நிலை மாற வேண்டும்.. தமிழன் மேன்மை அடைய வேண்டும்... தொடர்ந்து எழுதுங்கள்... இதுபோன்ற எழுச்சிக் கவிதைகளை..!
உண்மை நண்பரே! என்ன வளம் இல்லை நம்மிடம்?, உலகுக்கு நாகரீகம் கற்றுத்தந்தவர்களில் நம் இனத்துக்கும் உண்டு பெரும்பங்கு இருந்தும் முன்னேரவில்லை, முடியவில்லையே என்பதைவிட முயற்சியில்லையே என்பது பெருங்குறை, நமது முயற்சி தொடரும். நன்றி
சிந்திக்க வைத்த கவிதை வரிகளை ரசித்து படித்தேன்..
சிறப்பாக உள்ளது உங்களுடைய படைப்புகள்..
தொடரட்டும் உங்களது முயற்சி!
வாழ்த்துகளுடன்,
கி.சதீசு குமார்
சதிசு அவர்களுக்கு,
கவிச்சோலைக்கு தங்களை அன்போடு வரவேற்கிறேன், தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. அடிக்கடி வருக, தங்கள் கருத்தினை தருக!
கருத்துரையிடுக